மாம்பூக்களால் மகிழும் விவசாயிகள்

பேரையூர்: 'பேரையூர் பகுதிகளில் மாம்பூக்கள் நன்றாக பூத்துள்ளதால் விளைச்சல் நன்றாக இருக்கும்' என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பேரையூர், சாப்டூர், பழையூர், வண்டாரி, சந்தையூர், கீழப்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாமரங்கள் உள்ளன. டிசம்பர் மாதத்தில் பூக்க ஆரம்பித்து தற்போது கொத்துக் கொத்தாகப் பூத்து குலுங்குகின்றன. இவை பிஞ்சு பிடித்து ஏப்ரல் இறுதி, மே தொடக்கத்தில் காய்கள் அறுவடைக்கு தயாராகும்.

அதுவரை பூக்கள் உதிராமல் இருக்கவும், பூச்சித் தாக்குதலில் இருந்து காக்கவும் மரங்களில் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தாண்டு நல்ல விளைச்சலும், நல்ல விலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், ''பருவநிலை மாற்றத்தால் 2 ஆண்டுகளாக மா மகசூல் பாதித்தது. இந்தாண்டு நன்றாக பூத்துள்ளது. இதனால் நல்ல மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.

Advertisement