திட்ட பணிகள் ஆய்வு

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடக்கும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள் மற்றும் வெள்ளப்பாக்கத்தான் வாய்க்காலில் தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தனர்.

மருத்துவமனை கட்டட பணியை பிப்ரவரி மாதம் முடிக்க வேண்டும்.ஆனால் அதற்குள் முடியும் அளவுக்கு வேலை நடக்கவில்லை.

எனவே பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலத்திலும் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் உத்தரவிட்டார்.

சேர்மன் ஜெயந்தி, திட்ட அலுவலர் ஷபானா அஞ்சும், கமிஷனர் கிருஷ்ணராஜன், வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம் உடனிருந்தனர்.

Advertisement