குடியரசு தின விழாவிற்காக அண்ணா மைதானம் சீரமைப்பு
கடலுார்; குடியரசு தின விழாவையொட்டி, கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
குடியரசு தின விழா வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிபி ஆதித்யா செந்தில்குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
விழாவில் போலீசார் அணிவகுப்பு மரியாதை, தியாகிகள் கவுரவிப்பு, சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
இதற்காக, மைதானத்தில் கொடிமேடை, கொடிக்கம்பம், விழா பகுதியை வர்ணம் பூசி அழகுபடுத்துதல், மைதானத்தை விழாவிற்கு தயார்படுத்துதல், தேவையான இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் முதற்கட்டமாக, அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள செடிகள், புல் ஆகியவை அகற்றி துாய்மைப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.