சர்வீஸ் ரோட்டில் குவியும் குப்பை

அலங்காநல்லுார்: வடுகபட்டி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் போக்குவரத்தும் பாதிக்கிறது.

அலங்காநல்லுார் ஒன்றியம் வடுகபட்டி, அய்யங்கோட்டை, நகரி பகுதி 4 வழிச்சாலை சர்வீஸ் ரோட்டோரம், கண்மாய் கரை பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வருகிறது. அவ்வப்போது குப்பையை எரிப்பதால் 4 வழிச்சாலை புகை மண்டலமாக மாறுகிறது.

வடுகபட்டியில் மதுரை செல்லும் சர்வீஸ் ரோட்டில் பஸ் ஸ்டாப் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகே ரோட்டின் நடுப்பகுதி வரை குப்பை கொட்டி உள்ளனர். ரோட்டின் இருபுறமும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி உள்ளது. இதனால் அரசு பஸ்கள் சர்வீஸ் ரோட்டில் வர முடியாத அளவு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ஒன்றிய நிர்வாகம் குப்பையை அகற்றவும், கொட்டாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement