சிட்டி ஸ்போர்ட்ஸ்

மதுரை: இன்டர் பாலிடெக்னிக் தடகள சங்கம் சார்பில் மண்டல அளவிலான ஹேண்ட்பால் போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது. ஆறு அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரி மதுரை அணியும் வாடிப்பட்டி தாய் பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின. இதில் 25 -- 10 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றது. முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ேஷக் தாவூத் பரிசு, கோப்பை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் ரத்தினகமல், மகேந்திரன், மதர் குளோப் ரெவலுசனரி ஹேண்ட்பால் அகாடமி தலைவர் அன்பரசன் பாராட்டினர். சங்க செயலாளர் மருதுபாண்டியன், நிர்வாகிகள் ராஜரத்தினம், ரமேஷ், செந்தில் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement