கோவையில் 195 பேர் கைது

1

கோவையில் 195 பேர் கைது

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழில் சங்கத்தினர் சார்பில், கோவை காந்திபுரம் அரசு விரைவுப் போக்குவரத்து பஸ் ஸ்டாண்ட் முன், சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில துணைப் பொதுச்செயலாளர் கனகராஜ் கூறியதாவது:கடந்த, ஏழு ஆண்டுகளாக ஓய்வுபெற்ற, 90 ஆயிரம் ஊழியர்களின் அகவிலைப்படி, 56 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், ஆனால், 5 சதவீதம் தான் தரப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னை தீர்க்கப்படும் என, இந்த அரசு தெரிவித்தது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அவர்களது பணப்பலன்கள் கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால், 4,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவோம் என, தி.மு.க., அரசு தெரிவித்தது. அதுவும் நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.போராட்டத்தில், சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் பங்கேற்றனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, 10 பெண்கள் உட்பட, 195 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement