உங்களைத்தேடி உங்கள் ஊர் முகாமில் 300 மனுக்கள்

தேனி: தேனி தாலுகாவில் நடந்த உங்களைத்தேடி உங்கள் ஊர் முகாமில் பொதுமக்கள் 300 பேர் மனு அளித்தனர்.

தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நடை பெற்ற முகாமினை தொடர்ந்து காலையில் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு நடந்தது. இதில் பட்டா மாறுதல், பட்டாவில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300 பேர் மனு அளித்தனர். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத் பீடன், தாசில்தார் சதிஸ்குமார் உள்ளிட்டேர் முகாமில் பங்கேற்றனர்.

Advertisement