சைனிக் பள்ளிகளில் சேர இன்று கடைசி நாள்

சென்னை; நாட்டில் உள்ள சைனிக் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, இன்று கடைசி நாள்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஒன்றியம், அமராவதி உட்பட, நாடு முழுதும் 33 இடங்களில், சைனிக் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த ஆண்டுக்கான சேர்க்கை, கடந்த டிச., 24ல் துவங்கி, இன்றுடன் நிறைவு பெறுகிறது. தேர்வுக் கட்டணம் செலுத்த நாளை, விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய, 28ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் சைனிக் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின்படி பாடங்கள் நடத்தப்படுகின்றன. ராணுவம், விமானப்படை, கடற்படை அதிகாரி ஆக, ஆர்வமுள்ள மாணவர்களுக்கான பள்ளிகளாக இவை செயல்படுகின்றன. இவற்றில், தேசிய நுழைவுத்தேர்வு, உடல் தகுதி தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 'https://exams.nta.ac.in/AISSEE/' இணையதளத்தை பார்க்கவும்.

Advertisement