கயிறு தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து

சிங்கம்புணரி: சிவகங்கையில் கயிறு தொழிற்சாலையில் திடீர் தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.



சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கயிறு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இங்கு காரைக்குடி ரோட்டில் சேவுகன் என்பவருக்கு சொந்தமான கயிறு ஏற்றுமதி மற்றும் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.


இதில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள், மூலப்பொருட்கள், ஏற்றுமதிக்காக வைத்திருந்த கயர் பித், குரோபேக் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


சிங்கம்புணரி, திருப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement