பஸ்களில் ஏர்ஹாரன் பறிமுதல்
கடலுார்; கடலுார் பஸ் நிலையத்தில் 10 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலுார் மாநகரில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிக ஒலி எழுப்புவதாக வட்டார போக்குவரத்துத் துறைக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், கடலுார் பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையிலான குழுவினர் இணைந்து நாய்ஸ் டெசிபெல் மீட்டர் வைத்து 40 அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 10 பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்ைள பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement