விழிப்புணர்வு பேரணி

பண்ருட்டி; பண்ருட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி.ராஜா துவக்கி வைத்தார்.

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று துவங்கியது. பேரணியை பண்ருட்டி டி.எஸ்.பி.ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன் முன்னிலை வகித்தார். பேரணியில் பள்ளி மாணவர்கள் பதாகைகள் ஏந்தி சாலை விழிப்புணர்வு வாசகங்களை கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன்,தேவநாதன், மணிவண்ணன், சண்முகராஜா, என்.சி.சி., அலுவலர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement