அறிவியல் துளிகள்
01. ஆக்டோபஸ் விசித்திரமான உயிரினம். அமெரிக்காவைச் சேர்ந்த சிகாகோ பல்கலை மேற்கொண்ட ஆய்வில், ஆக்டோபஸின் எட்டு கைகளும் தனித்தனி நரம்பு மண்டலத்தால் இயக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
02. ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்டது எல்டர்பெர்ரி. இதன் சாற்றைக் குடித்து வந்தால், குடல் நுண்ணுயிரிகள் எண்ணிக்கை அதிகரித்து, உடல் எடை குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
03. உலகளவில் ஆண்டுதோறும் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பாம்பு விஷத்தை முறிக்கும் புரதம் ஒன்றை, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டேவிட் பேகர் உருவாக்கியுள்ளார்.
04. நாம் உண்ணும் உணவில் உள்ள நார்ச்சத்தை குடலில் உள்ள பாக்டீரியா, கொழுப்பு அமிலங்களாக மாற்றுகிறது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்போர்ட் பல்கலை கண்டறிந்துள்ளது.
05. அமெரிக்காவைச் சேர்ந்த மின்னசொட்டா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், தினமும் வால்நட் சாப்பிட்டு வந்தால் இதய நோய், உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது.