குழந்தைகளுக்கு நோய் தடுப்பூசி; கண்காணிப்பு அலுவலர் 'அட்வைஸ்'

நெல்லிக்குப்பம்; குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் நாளில் மருத்துவமனையிலும் செவிலியர் ஒருவர் தடுப்பூசி போடவேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அரசு சுகாதாரத் துறை மூலம் இலவசமாக அனைத்து நோய்களுக்குமான தடுப்பூசி போடப்படுகிறது.

நெல்லிக்குப்பத்தில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.குழந்தைகளை துாக்கிக்கொண்டு பெற்றோர்கள் அலைவதை தவிர்க்க. ஒரு செவிலியர் ஒவ்வொரு பகுதியாக புதன்கிழமை சென்று தடுப்பூசி போடுகிறார்.ஆனால் இதுவே பெற்றோருக்கு சிரமமாக மாறிவிட்டது.ஒரு பகுதிக்கு செவிலியர் சென்று சிறிது நேரம் மட்டுமே இருப்பார்.அதற்குள் அங்கு வர காலதாமதமாகும் பெற்றோர் குழந்தைகளை துாக்கிக்கொண்டு அடுத்த இடத்துக்கு அலைய வேண்டியுள்ளது.

நேற்று ஆய்வுக்கு வந்த கண்காணிப்பு அலுவலர் மோகனிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.இனி தடுப்பூசி போடும் நாளில் மருத்துவமனையிலும் ஒரு செவிலியர் ஊசி போட வேண்டுமென உத்தரவிட்டார்.

Advertisement