நெல்லிக்குப்பம் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தது.

நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டை சேர்ந்த ஏழுமலை மகன் சூர்யா,25 தனியார் நிறுவன ஊழியர்.இவரும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் மகள் திவ்யாவும்,21; சமூக வலைதளங்கள் மூலம் இரண்டு ஆண்டுகளாக பழகி காதலித்துள்ளனர். இதையறிந்த திவ்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடலுார் அடுத்த திருவந்திபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் நேற்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினார்.

Advertisement