சாலையில் குவிந்துள்ள குப்பை; துர்நாற்றத்தால் மக்கள் அவதி

கடலுார்; கடலுார் மாநகராட்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் நாள்தோறும் 20 முதல் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. குப்பை கொட்ட முறையான இடம் இல்லாததால் மாநகராட்சி நிர்வாகம் அவதிப்படுகிறது. நகரில் குப்பைகள் முழுவதையும் அப்புறப்படுத்த இடமில்லாததால், ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதை தொழிலாளர்கள் தீயிட்டு கொளுத்தி அழிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். கடலுார் புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு சாலையில் குப்பைகள் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Advertisement