ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,வில் இணைப்பு

கடலுார்; ஓ.பி.எஸ்., அணியில் இருந்து நிர்வாகிகள் விலகி முன்னாள் அமைச்சர்கள், செங்கோட்டையன், சம்பத் முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.

கடலுாரில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத் ஆகியோர் கடலுார் வருகை தந்தனர்.

அப்போது ஓ.பி.எஸ்., அணியில் இருந்த நிர்வாகிகள் மாவட்ட மீனவரணி செயலாளர் கிருஷ்ணராஜ், பகுதி செயலாளர் கதிரவன், வர்த்தக பிரிவு செயலாளர் குபேந்திரன், பகுதி அவைத் தலைவர் துரை ஆசாரி, பகுதி துணை செயலாளர் சேகர், சங்கீதா, நாராயணன், பாஸ்கர் உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத் ஆகியோர் முன்னிலையில், அ.தி.மு.க., வில் இணைந்தனர்.

Advertisement