சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப பலி
கடலுார்; கடலுார் அருகே விறகு அடுப்பில் சமைக்கும்போது, சேலையில் தீப்பிடித்து, மூதாட்டி உடல் கருகி இறந்தார்.
கடலுார் முதுநகர் அடுத்த சுத்துக்குளத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன் மனைவி மண்ணாங்கட்டி,70; இவர், வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது அடுப்பிலிருந்து தீப்பொறி சேலையில் பட்டு தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த மண்ணாங்கட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று காலை இறந்தார்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement