பைக் விபத்தில் ஒருவர் பலி

சிதம்பரம்; சிதம்பரம் அருகே சாலையோர தடுப்புக்கட்டையில் பைக் மோதி ஒருவர் இறந்தார்.

சிதம்பரம் அடுத்துள்ள நக்கரவந்தன்குடியை சேர்ந்தவர் சீதாராமன் மகன் ராமன்,41; திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம், மோட்டார் பைக்கில் கொடியும்பாளையத்தில் இருந்து இளந்திரைமேடு மெயின் ரோட்டில் சென்றார். அப்போது, சாலையோர வாய்க்கால், தடுப்புகட்டையில், எதிர்பாராமல் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement