பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி; ஏ.பி.ஜே., தமிழன்ஸ் அணி சாம்பியன்
சிதம்பரம்; சிதம்பரம் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஏ.பி.ஜே., தமிழன்ஸ் அணியினர், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
சிதம்பரம் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் ஆறாவது சீசன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மைதானத்தில் நடந்தது.
இதில் புதிய சிறகுகள், ராயல் ரைடர்ஸ், தன்டர் ஸ்ட்ரைக்கர், ஏ.பி.ஜே., தமிழன்ஸ், யங் ஸ்டார்ஸ்., கிரேசி11, ஜாலி பிளேயர்ஸ், தாதா வாரியர்ஸ், ஸ்பார்ட்டன் ராக்கர்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன.
இதின் இறுதிப்போட்டியில் ஏ.பி.ஜே.,தமிழன்ஸ் மற்றும் தன்டர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. இதில் ஏ.பி.ஜே.,தமிழன்ஸ் அணி வெற்றிபெற்று, மூன்றாவதுமுறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன், ஆர்.வி.பி.,மருத்துவமனை டாக்டர் கதிரவன் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement