எஸ்.டி., சீயோன் பள்ளி மாணவர்கள் கராத்தே பிளாக் பெல்ட் தகுதி தேர்வு
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளியில் மாணவர்கள் கராத்தே பிளாக் பெல்ட் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
பெராக் ஒகினேவா கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் பிளாக் பெல்ட் பெறுவதற்கான தகுதி தேர்வு பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளியில் நடந்தது.
இத்தேர்வில் தலைமை பயிற்சியாளர் சென்சாய் ரங்கநாதன், மாணவர்களிடம் கராத்தே கிக் மூமண்ட், பஞ்ச் மூவ்மெண்ட், உடல்திறன் பிளாக் மூவ்மெண்ட், பைட் டெக்னிக்கல் உடல்வலிமை போன்ற பல விதமான நுணக்கங்களை ஆய்வு செய்தார்.
தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற்று பிளாக் பெல்ட் பெறுவதற்காக ஆயுத்தமாக்கப்பட்டனர். நிகழ்சியில் குழந்தை நல மருத்துவர் தீபாசுஜின், தாளாளர் சாமுவேல் சுஜின் ஆகியோர் மாணவர்களை பாராட்டி ஊக்குவித்தனர்.
இதில் பயிற்சியாளர் இளவரசன், சத்யராஜ், சத்தியமூர்த்தி, ரவிக்குமார், மாணவர்கள் பங்கேற்றனர்.