பண்ருட்டியில் பூப்பந்து போட்டி; நகராட்சி சேர்மன் பரிசு வழங்கல்

பண்ருட்டி; பண்ருட்டி நண்பர்கள் பூப்பந்து கழகம் சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் பரிசுகள் வழங்கினார்.

பண்ருட்டி நண்பர்கள் பூப்பந்து கழகம் மற்றும் மாவாட்ட பூப்பந்து கழகம் இணைந்து மாநில அளவிலான 10 வது ஐவர் பூப்பந்தாட்ட போட்டி கடந்த 18,19ம்தேதி இருநாட்கள் நடந்தது.

போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம், லயோலா கல்லுாரி, திண்டுக்கல் அணி, திருச்சி ரயில்வே அணி உள்ளிட்ட 40 அணிகள் பங்கேற்றன. நடுவராக மாவட்ட பூப்பந்து கழக செயலாளர் திருவிக்ரமன் செயல்பட்டார். இதில் எஸ்.ஆர்.எம்.,அணி முதல் பரிசும், 2 ம் பரிசை சென்னை லயோலா கல்லுாரியும், 3ம் பரிசு திண்டுக்கல் அணியினரும், 4ம் பரிசு பரங்கிபேட்டை அணியினரும், 5ம் பரிசு பண்ருட்டி நண்பர்கள் அணியினர் பெற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் முதல் பரிசாக 20 ஆயிரம் பணம் மற்றும் கோப்பை வழங்கினார். 2வது பரிசாக ஜேப்பியார் ஸ்டீல் அதிபர் ஜாகீர் உசேன் 15ஆயிரம் ரூபாய், 3வது பரிசாக சி.ஆர்.பி.,கேஷ்யூஸ் உரிமையாளர் சக்திவேல் 10 ஆயிரம் வழங்கினார்.

4வது பரிசு ஆடிட்டர் தியாகராஜன், 5வது பரிசு அவை தலைவர் ராஜா வழங்கினார். இதில் அலீமா ஸ்டீல் சுல்தான், ஒய்வுபெற்ற தலைமையாசிரியர் பரந்தாமன், கவுன்சிலர் சண்முகவள்ளிபழனி, நகர சிறுபான்மை பிரிவு ஜாகீர்உசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement