மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி 

சிதம்பரம்; சிதம்பரம் சதுரங்க சந்திப்பு கழகம் சார்பில், மாவட்ட அளவிலான, 6வது சதுரங்க விளையாட்டு போட்டி நடந்தது.

சிதம்பரம், ஆக்ஸ்போர்டு பள்ளியில், 9, 13, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பங்கேற்ற, சதுரங்க போட்டியில், 280 க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். சதுரங்க சந்திப்பு கழக செயலாளர் கோவை சங்கர் தலைமை தாங்கினார். பொருளாளர் கமால், தலைமை ஆர்பிட்டர் பிரேம்குமார் போட்டிகளை நடத்தினர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா பத்து பரிசுகள் வீதம் 80 பரிசுகள் மற்றும் பொது பிரிவில் 5 ஆயிரம் ரொக்க பரிசை பள்ளியின் துணை தலைவர் யாஸ்மின் இலியாஸ் வழங்கினார்.

முதல்வர்கள் வெங்கடாசலபதி, சங்கரலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement