மார்பக புற்றுநோயை ஒரே டோசில் குணப்படுத்தும் மருந்து: விஞ்ஞானிகள் சாதனை
புதுடில்லி: ஒரே டோஸில் மார்பக புற்றுநோய் கட்டிகளைக் கரைக்கும் மற்றும் பெரிய கட்டிகளை சுருக்கும் வல்லமை கொண்ட மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த மருந்தால் எந்த பக்கவாதமும் ஏற்படாது என அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து ஏசிஎஸ் மத்திய அறிவியல் என்ற மருத்துவ இதழில் நேற்று (ஜன.,22) ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது.
விஞ்ஞானி பால் ஹர்ஜென்ரோதர் மற்றும் சக விஞ்ஞானிகள் குழுவினர் ஏற்கனவே புற்றுநோய் செல்களை கொல்லும் ERSO என்ற சிறிய மூலக்கூறினை கண்டறிந்தனர்.
ஆனால், இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. 2022ம் ஆண்டில் ஆய்வாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ERSO போன்ற சிறு மூலக்கூறுகளை வைத்து தொடர்ச்சியாக நடத்திய ஆய்வில், அதிக திறன் கொண்ட சிறு மூலக்கூறுவைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வின் இறுதியில் ERSO TFPY என்ற சிறந்த சிறு மூலக்கூறு உருவாக்கப்பட்டு அது மார்பகப் புற்றுநோய் கட்டிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்படுவதையும் கண்டறிந்துள்ளனர். இது பல்கிப் பெருகும் மார்பகப் புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்கும் கட்டுப்படுத்துவதோடு மிகப்பெரிய அளவிலான பக்கவிளைவுகளை எதையும் ஏற்படுத்தவில்லை. இது எலி, பூனை, நாய்களிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது.