நக்சல்கள் புதைத்து வைத்த 50 கிலோ வெடி பொருள் மீட்பு
பிஜப்பூர்,:சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பசகுடா - அவாப்பள்ளி சாலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நேற்று தேடுதல் வேட்டைநடத்தினர்.
அப்போது, அருகேயுள்ள துர்கா தேவி கோவில் பகுதியில் சாலையின் கீழ் பகுதியில் கற்களை கொண்டு மூடப்பட்டிருந்த குழியை சோதனையிட்டனர். அப்போது கற்கள் மற்றும் சிமென்ட்டால் மூடப்பட்டிருந்த பள்ளத்தை மெட்டல் டிடெக்டர் வாயிலாக சோதனை செய்ததில், அங்கு வெடி பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, குழிக்குள் ஆழமாக புதைத்து வைத்திருந்த 50 கிலோ எடையுள்ள வெடிபொருளை ரிமோன்ட் கன்ட்ரோல் வாயிலாக வெடிக்கச் செய்து, செயலிழக்க செய்தனர். இதனால் அந்த சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement