பிச்சை கொடுத்தவர் மீது ம.பி.,யில் வழக்கு பதிவு

இந்துார், மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துார் மாவட்டம், நாட்டின் துாய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த மாவட்டத்தில் பிச்சை எடுக்கவும், பிச்சை கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிச்சை எடுப்பது குறித்து தகவல் அளிப்போருக்கு, 1,000 ரூபாய் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துாரின் கண்ட்வா சாலையில் உள்ள ஒரு கோவில் முன் அமர்ந்திருந்த பெண் பிச்சைக்காரருக்கு, சமீபத்தில் ஒருவர் பிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

Advertisement