மஹா கும்பமேளாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி?

புதுடில்லி: மஹா கும்பமேளாவை முன்னிட்டு, பிப்.,5 அன்று பிரயாக்ராஜ் நகரில் பிரதமர் மோடி புனித நீராட திட்டமிட்டு உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.

உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா ஜன.,13ம் தேதி துவங்கி பிப்.,26 வரை நடைபெறுகிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது.

இந்நிலையில், இங்கு வரும் பிப்.,5 ம் தேதி பிரதமர் மோடி புனித நீராடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27ம் தேதி இங்கு வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து கங்கா ஆரத்தி செய்ய உள்ளார். பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பிப்., 1ல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்.


ஜனாதிபதி திரவுபதி முர்முவும், பிப்., 10ம் தேதி பிரயாக்ராஜ் நகர் வர திட்டமிட்டு உள்ளார். அன்றைய நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

முக்கிய தலைவர்கள் பிரயாக்ராஜ் நகர் வர உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Advertisement