கிரிக்கெட் பந்தில் 'கின்னஸ்' சாதனை

மும்பை: மும்பையில் உள்ள வான்கடே மைதானம் 1974ல் திறக்கப்பட்டது. இதன் 50வது ஆண்டு விழா, மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) சார்பில் கொண்டாடப்படுகிறது.


நேற்று, வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளை பயன்படுத்தி 'FIFTY YEARS OF WANKHEDE STADIUM.' என்ற ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டது. இதில் 'புல் ஸ்டாப்' வைக்க மட்டும் 44 பந்து பயன்படுத்தப்பட்டது.


தவிர FIFTYக்கு 1902, YEARSக்கு 2831 OFக்கு 1066, WANKHEDEக்கு 4990, STADIUM 3672 பந்துகள் பயன்படுத்தப்பட்டன. அதிக கிரிக்கெட் பந்துகளை பயன்படுத்தி, பெரிய ஆங்கில வாக்கியம் அமைத்து 'கின்னஸ்' சாதனை படைக்கப்பட்டது.
கடந்த 1975, ஜன. 23-29ல் வான்கடே மைதானத்தில் முதல் சர்வதேச போட்டி நடந்தது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டெஸ்டில் மோதின. இங்கு 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை (50 ஓவர்) வென்றது.


'கின்னஸ்' சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட பந்துகள், கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Advertisement