டென்னிஸ் காலிறுதியில் சஹாஜா
பெங்களூரு: பெங்களூரு டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் சஹாஜா முன்னேறினார்.
பெங்களூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சஹாஜா, ரஷ்யாவின் டிமோபீபாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-1 என வசப்படுத்திய சஹாஜா, அடுத்த செட்டை 3-6 என இழந்தார். மூன்றாவது செட்டினை 6-1 என கைப்பற்றினார். 2 மணி நேரம், 2 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா, 6-1, 3-6, 6-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, தட்ஜனா மரியா மோதினர். இதில் அன்கிதா 1-6, 3-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்ப்ரே, பிரிட்டனின் பார்னெட் ஜோடி 3-6, 6-3, 10-2 என செர்பியாவின் ஜகுபோவிச், பிரேசிலின் பிகோசி ஜோடியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.