பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாடல் மாருதி சுசூகி கார்கள் விலை 32,500 வரை உயர்கிறது; காரணம் இதுதான்!
புதுடில்லி: உள்ளீட்டு பொருட்கள் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பால், மாருதி சுசூகி நிறுவனம் அதன் பல்வேறு மாடல் கார்களின் விலையை வரும் பிப்ரவரி 1 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது.
குறைந்த விலையில் கார் வாங்க வேண்டும் என்றால் மனதிற்கு வருவது சுசூகி கார்கள் தான். மற்ற கார்களின் விலையோடு ஒப்பிடும் போது, விலைகள் சற்று குறைவாக இருக்கும். இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாடல் மாருதி சுசூகி கார்கள் விலை 32,500 வரை உயர்கிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாருதி சுசூகி நிறுவனம் கூறியதாவது: உள்ளீட்டு பொருட்கள் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பால், மாருதி சுசூகி நிறுவனம் அதன் பல்வேறு மாடல் கார்களின் விலையை வரும் பிப்ரவரி 1 முதல் உயர்த்த உள்ளோம். அனைத்து மாடல்கள் விலை 32,500 வரை உயர்கிறது. செலவு குறைப்புக்கு முயற்சி செய்தாலும், அதிகரித்த செலவுகளில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.
ஏற்கனவே, இதே காரணங்களுக்காக, 2025ம் ஆண்டு, ஜன., 1ம் தேதி முதல் விலையை 4 சதவீதம் வரை உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும், மாருதி சுசூகி நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ளது. எந்தெந்த கார் மாடல்களின் விலை எவ்வளவு விலை உயர்கிறது. அதன் விபரம் பின்வருமாறு:
செலிரியோ ரூ.32,500, இன்விக்டோ ரூ.30,000, வேகன் ஆர் ரூ.15,000, ஸ்விப்ட் ரூ. 5,000, பிரஸ்ஸா- ரூ, 20,000, கிராண்ட் விதாரா ரூ.25,000, ஆல்டோ கே ரூ, 19,500 வரை உயர்கிறது.
இது குறித்து கார்கள் வாங்க ஆர்வமாக இருப்பவர்கள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் கார்களின் விலைகள் 58% அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் மாத வருமானம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாமல் ஒரே மாதிரியாக உள்ளது என்கின்றனர்.