உருட்டுக்கட்டையுடன் பாதுகாப்பு; சீமான் மீது போலீசார் வழக்கு
சென்னை: நாம் தமிழர் கட்சியினர் உருட்டுக்கட்டையுடன் பாதுகாப்புக்கு வந்தது தொடர்பாக, சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈ.வெ.ராமசாமி குறித்து பேசியதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை ஒரு குழுவினர் நேற்று முன்தினம் (ஜன.,22) முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சீமானின் உருவ பொம்மையை கொளுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இது தொடர்பாக, அவர்கள் மீது நீலாங்கரை போலீசார், சட்ட விரோதமாக கூடுதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீ வைத்து கொளுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, சீமான் வீட்டை முற்றுகையிட வந்தவர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் உருட்டுக்கட்டைகளுடன் அங்கு திரண்டிருந்தனர்.
இது தொடர்பாக சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து (1)
கந்தன் - ,
24 ஜன,2025 - 12:37 Report Abuse
முடிஞ்சா உள்ள வச்சு பாரு தில் இருந்தா
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement