ஓய்எஸ்ஆர்., காங்., எம்.பி., ராஜினாமா: ஜெகன் மோகன் அதிர்ச்சி

1

புதுடில்லி: ஓய்எஸ்ஆர்., காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., விஜய்சாய் ரெட்டி, நாளை தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.

ஆந்திரா சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஜெகன்மோகன் தலைமையிலான ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் பிறகு அக்கட்சி எம்.பி.,க்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருந்தனர். நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில், ஜெகன்மோகனுக்கு மிகவும் நெருக்கமானவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான விஜய்சாய் ரெட்டி, நாளை எம்.பி., பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து உள்ளார். வேறு கட்சியில் சேர மாட்டேன் என விளக்கமளித்து உள்ள அவர், விவசாயத்தில் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார்.

Advertisement