மாணவர்களுக்கு 'தொல்லை' ஆசிரியர் 'போக்சோ'வில் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த வளையப்பட்டியில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மாணவர் விடுதியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்த பிரகாஷ், 28, பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், விடுதியில் உள்ள மாணவர்களுக்கு, பாலியல் தொல்லை தருவ-தாக, சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர், நேற்று முன்தினம் மாலை, நாமக்கல் கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம் புகாரளித்-தனர்.
இதையடுத்து, ஆர்.டி.ஓ., பார்த்தீபன், ஏ.எஸ்.பி., ஆகாஷ்-ஜோஷி, மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், விடுதியில் தங்கி பணியாற்றும் ஆசிரியர் பிரகாஷ், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.