பிரவீன் சித்ரவேல் இலக்கு


விஜயநகர்: இந்தியாவின் 'டிரிபிள் ஜம்ப்' வீரர் பிரவீன் சித்ரவேல் 23. தேசிய சாதனை (17.37 மீ.,) படைத்த இவர், ஆசிய விளையாட்டில் (2023) வெண்கலம் வென்றார். அடுத்து 2026, ஸ்காட்லாந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இவர் கூறுகையில்,''கடந்த 2022, காமன்வெல்த்தில் 3 செ.மீ., வித்தியாசத்தில் பதக்கத்தை நழுவவிட்டேன். 2026ல் தங்கம் வெல்ல முயற்சிப்பேன். தொடர்ந்து இதே லட்சியத்தில் இருப்பதால், சரியான துாக்கம் இல்லை. இந்த ஆண்டு உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், உலக சாம்பியன்ஷிப், அடுத்து டைமண்ட் லீக் போட்டிகள் வரவுள்ளன. இதில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்,'' என்றார்.

Advertisement