எருதாட்டம் கோலாகலம்


எருதாட்டம் கோலாகலம்


தாரமங்கலம், : தாரமங்கலம் அருகே, அத்திராம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் எருதாட்டம் நேற்று நடந்தது. இதற்காக அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, மாடுகளுக்கு பொட்டு வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து இளைஞர்கள் காளைகளுக்கு வண்ணபொடி துாவி, கோவிலுக்கு முன் பிடித்து எருதாட்டம் ஆடினர். 10 காளைகளை இளைஞர்கள் பிடித்து வந்தனர். எருதாட்டத்தை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். தாரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement