அச்யுதா பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
திண்டுக்கல் : திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக காந்திகிராம பல்கலை துணை வேந்தர் டாக்டர் பஞ்சநாதம் பங்கேற்றார். பள்ளி சேர்மன் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள் தலைமை வகித்தனர்.
பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம், பட்டாபிராம் முன்னிலை வகித்தார்கள். 11ம் வகுப்பு மாணவிகள் ஜெனோ எவாலினா, ஹஸ்மத் ஷகினா வரவேற்றனர். பள்ளி முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பொதுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு வழங்கினார். நீட், ஐ.ஐ.டி. தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை மாணவர்கள் ரித்திகா, அனித்ராஹரினி, ராபியா ஷப்ரின், தனுாஸ்ரீ, நக் ஷத்ரா, அஜய், நிருதினி, ஹம்ஷிதா, ஆராத்திரிகா, மபாஸ், சாய் வத்சன் தொகுத்து வழங்கினர். 11ம் வகுப்பு மாணவர்கள் நிரஞ்சன், நிலேஷ் நன்றி கூறினர். ஏற்பாடுகளை ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா. ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ஆசிரிய ஆசிரியைகள் மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் செய்தனர்.