என்.பி.ஆர்., கல்லுாரி பட்டமளிப்பு விழா

நத்தம்,: நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி, கலை,அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் 763 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி , பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி பட்டமளிப்பு விழா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன் முன்னிலையில் நடந்தது.

பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பொறியியல் , தொழில்நுட்பக் கல்லுாரி கல்வி இயக்குனர் கார்த்திகை பாண்டியன் பேசினார். வி.ஐ.டி., பல்கலை நிறுவனர் ஜி.விஸ்வநாதன் பட்டங்களை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:

படிப்பின் அருமை புரிந்தால் தான் கல்வியின் மகத்துவம் தெரியும். 'கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று கூறிய மதுரை பாண்டிய மன்னர் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தலை விட ஓர் ஏழை மாணவனுக்கு கல்வி கற்பித்தலே சிறப்பு என்று கூறினார். கல்வி உயர்ந்தால் நாடு உயரும், மாணவர்கள் உயர்கல்வி கற்றால் வீட்டையும் அதன் மூலம் நாட்டையும் உயர்த்தலாம். கல்வித்தரம் உயர்ந்தால் தான் நாட்டின் பொருளாதாரமும் உயரும் என்றார். தேர்வுஒருங்கிணப்பாளர் கோபிசாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement