நல்ல குடிநீர் வினியோகிக்க வலியுறுத்தல்
நல்ல குடிநீர் வினியோகிக்க வலியுறுத்தல்
பனமரத்துப்பட்டி,: பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி ஊராட்சி சின்னையாபுரத்தில், அரசு தொடக்கப்பள்ளி முன் உள்ள தார்ச்சாலை சேதமடைந்தது. அங்கு, ரூ.10 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்க, ஒன்றிய பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்பணியை, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் சுரேஷ்குமார் நேற்று துவக்கி வைத்தார்.
அப்பகுதி மக்கள், 'தினமும் உப்பு கலந்த குடிநீர் வினியோகம் செய்கின்றனர். நல்ல குடிநீர் வருவதில்லை' என, புகார் எழுப்பினர். இது குறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: அங்குள்ள குடிநீர் ஆப்பரேட்டர், நல்ல குடிநீர், உள்ளூர் தண்ணீர் இரண்டையும் கலந்து வினியோகம் செய்ததால், இப்பிரச்னை எழுந்துள்ளது. இனி, நல்ல குடிநீர், உள்ளூர் உப்பு குடிநீர் ஆகியவற்றை தனித்தனியாக இடைவெளி விட்டு வினியோகம் செய்ய, அறிவுரை
வழங்கப்படும்.இவ்வாறு கூறினர்.