சிவகங்கையில் மாரத்தான் ஓட்டம் பரிசு கிடைக்காமல் ஏமாற்றம் 

சிவகங்கை : சிவகங்கையில் நடந்த மாரத்தான் ஓட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் பரிசுத்தொகை வரவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில்முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்த நாளையொட்டி மாரத்தான் ஓட்டப்போட்டி ஜன., 5ம் தேதி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.

வயது 17 முதல் 25க்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், மாணவர்களுக்கு 8 கி.மீ., துாரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ., துாரமும் நிர்ணயம் செய்திருந்தனர். அதேபோன்று 25 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 10 கி.மீ., துாரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ., துாரமும் நிர்ணயம் செய்து நடத்தினர்.

இப்போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்குரூ.5000, இரண்டாம் இடம் ரூ.3000, மூன்றாம் இடம் ரூ.2000மும், 4 வது முதல் 10வது இடத்திற்குள்வருவோருக்கு தலா ரூ.1000 பரிசு தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தனர்.

இப்போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அரசு இது வரை பரிசு தொகையை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை.

மாரத்தான் போட்டி முடிந்து 20 நாட்களை கடந்த பின்னரும், பரிசுதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை என வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் கேட்டால் வரும் என்ற பதில் தான் வருகிறதாம். இதனால், மாரத்தான் ஓட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பரிசு தொகை கிடைக்காமல் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement