குழந்தையுடன் தாய் மாயம்
குழந்தையுடன் தாய் மாயம்
தாரமங்கலம், :தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி, கொடியன்வட்டத்தை சேர்ந்தவர் காந்தி, 51. இவரது மகன் சந்தோஷ். திருவண்ணாமலையை சேர்ந்த சரனு, 29 என்பவருடன், 2022ல் திருமணம் நடந்து, இரண்டு வயதில் குழந்தை உள்ளது. சந்தோஷ் பெங்களூருவில் தங்கி கல் குவாரியில் பணி செய்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என, உறவினருடன் தாரமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சரனு சென்றார்.
சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கிளம்பியபோது, மருந்தை தவற விட்டதாக கூறி, உறவினரை அனுப்பியுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, வெளியே குழந்தையுடன் இருந்த சரனுவை காணவில்லை. தகவல் கிடைத்து காந்தி, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மனோ என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக, காந்தி புகார்படி, தாரமங்கலம் போலீசார் நேற்று வழக்குபதிந்து, காணாமல் போன தாய், குழந்தையை தேடி வருகின்றனர்.