புதிய வழித்தட பஸ்கள் ஓமலுாரில் துவக்கம்
புதிய வழித்தட பஸ்கள் ஓமலுாரில் துவக்கம்
ஓமலுார், :ஓமலுார் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், தாரமங்கலத்திலிருந்து எடையப்பட்டி வழியாக பனிக்கனுார் வரையிலும், சேலம் டவுன் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஓமலுார், நாலுகால்பாலம், தும்பிப்பாடி காலனி வழியாக தின்னப்பட்டிக்கு வழி தடத்தை நீட்டிப்பு செய்து, அரசு பஸ் துவக்க விழா, நேற்று ஓமலுார் அரசு பஸ் டிப்போவில் நடந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட இரண்டு பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஓமலுார் மற்றும் இடைப்பாடி அரசு பஸ் டிப்போவில், புதிதாக 'ஏசி' அமைக்கப்பட்டு, குளு குளு வசதியுடன் கூடிய ஓட்டுனர், நடத்துனர் ஓய்வெடுக்கும் அறையை அமைச்சர் திறந்து வைத்தார். விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஜோசப்டயஸ், பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன், கிளை மேலாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.
4 பேட்டரி வாகனம் துவக்கி வைப்புஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் மூன்று சக்கர பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை துவக்கி வைக்கும் விழா, ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே டவுன் பஞ்., தலைவி செல்வராணி தலைமையில் நடந்தது. அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். டவுன் பஞ்.,துணைத்தலைவி புஷ்பா, செயல் அலுவலர் நளாயினி, தி.மு.க., ஒன்றிய செயலர் ரமேஷ், பேரூர் செயலர் ரவிச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.