பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா


பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா


ஓமலுார், :தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.ஓமலுார் அருகே, முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று, தேசிய பெண் குழந்தைகள் தினம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது. கருத்தரங்கம், கட்டுரை போட்டி, மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு பேரணி, மஞ்சப்பை விழிப்புணர்வு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மன், போட்டியில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் உடனிருந்தனர்.

Advertisement