ஆத்துாரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ஆத்துாரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ஆத்துார், :ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில், நேற்று சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு முகாம், வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமையில் நடந்தது.
இதில், ஆத்துார் தீயணைப்புதுறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகன தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர். அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர், டிரைவிங் லைசென்ஸ் பெறுவது, தகுதி சான்று புதுப்பித்தல், புதிய வாகன பதிவு, போக்குவரத்து விதிகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்ஸ் சார்பில், விபத்து, முதலுதவி சிகிச்சை அளித்தல், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்து, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார், ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.