வேலைவாய்ப்பு முகாம் 52 பேருக்கு பணி ஆணை



வேலைவாய்ப்பு முகாம் 52 பேருக்கு பணி ஆணை


நாமக்கல், :நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். அதில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 29 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
அதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பொது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட, 164 பட்டதாரிகள் பங்கேற்றனர். அதில், 52 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி
நியமன ஆணை வழங்கப்பட்டது.

Advertisement