மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி
மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி
நாமக்கல், : முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆண்டுதோறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, இந்தாண்டுக்கான, பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாரதி தலைமை வகித்து, துவக்கி வைத்தார். அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசு, 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 3,000 ரூபாய் என பரிசுகள் வழங்கப்பட்டன. அதில், முதலிடம் பிடித்தவர்கள், வரும், 28ல், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர்.