டி.என்.பி.எல்., சார்பில் இலவச மருத்துவ முகாம்
டி.என்.பி.எல்., சார்பில் இலவச மருத்துவ முகாம்
கரூர்,:டி.என்.பி.எல்., (புகழூர் காகித ஆலை) சார்பில், 300 வது இலவச மருத்துவ முகாம் நடந்தது.அதில், காகித ஆலையை சுற்றியுள்ள ஓனவாக்கல்மேடு, நாணப்பரப்பு, கந்தசாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன் புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. அதில் டாக்டர்கள் மாலதி, ராஜலட்சுமி ஆகியோர், 250க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர். முகாமில் சளி, காய்ச்சல், தலைவலி, வயிற்று கோளாறு, மூட்டுவலி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement