சாலையில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு



சாலையில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு


கிருஷ்ணராயபுரம், :லாலாப்பேட்டை தபால் அலுவலகம் செல்லும் சாலையில், குப்பை கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கள்ளப்பள்ளி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், லாலாப்பேட்டை தபால் அலுவலக சாலை சந்திப்பில், குப்பை கொட்டுவதற்கான குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதில் மக்கள் குப்பை கொட்டி வந்தனர். தற்போது குப்பை தொட்டி பாரமரிப்பு இன்றி தலைகீழாக கவிழ்ந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கொட்டாமல், அருகில் உள்ள தபால் அலுவலக சாலை முன் கொட்டப்படுகிறது.
இதனால் அந்த சாலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு இன்றி உள்ள குப்பை தொட்டியை அகற்றிவிட்டு, அந்த பகுதியை துாய்மை செய்து, மாற்று இடத்தில் குப்பை தொட்டி வைப்பதற்கான நடவடிக்கையை பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.

Advertisement