கஞ்சா செடி வளர்க்கலாம்; ஆய்வுக்காக மட்டும் அனுமதி வழங்கியது அரசு; எந்த மாநிலம் தெரியுமா?
சிம்லா; அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடிகள் வளர்க்க ஹிமாச்சல பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காங்க்ரா மாவட்டம் தர்மசாலாவில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் மாநில வளர்ச்சி மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு திட்டஙகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, மாநிலத்தில் கஞ்சா செடிகள் கட்டுப்பாடுகளுடன் வளர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொழில்துறை, மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக கஞ்சா செடிகளை வளர்க்கலாம் என்று ஒப்புதல் தரப்பட்டு இருக்கிறது.
கஞ்சா செடியை எப்போது, எந்த அளவில் வளர்க்க வேண்டும் என்று மாநில வேளாண் ஆய்வுத்துறையுடன் இணைந்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆய்வுக்காக மட்டுமே கஞ்சா செடி வளர்ப்பு, மற்றபடி பொதுமக்களுக்கு வளர்க்க அனுமதி இல்லை என்றும் அமைச்சரவை கூறி உள்ளது.