கிராம ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்

வேடசந்துார்: காலமுறை ஊதியம், கருணை அடிப்படையிலான வாரிசு வேலை, ஓய்வு பெற்ற இறந்து போன ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த பண பலன்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். செயலாளர் ராஜலட்சுமி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நாகலட்சுமி, வட்டப் பொருளாளர் மணிமேகலை பேசினர்.

ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகம் முன்பு சங்க வட்டத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலக சங்க மாவட்ட இணைச் செயலாளர் மகாராஜன் , தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக வட்டச் செயலாளர் வரதராஜன், வட்ட பொருளாளர் பத்மாவதி கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் விஜயபாஸ்கர் நன்றி கூறினார்.

Advertisement