போதை பொருள் தடுப்பு ஊர்வலம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு ,ஆயத் தீர்வுத் துறை சார்பில் நடந்த போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து அமைச்சர் தலைமையில் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஆர்.டி.ஓ., கிஷான்குமார், கலால் உதவி ஆணையர் பால்பாண்டி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, தாசில்தார் வடிவேல் முருகன், தி.மு.க., நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பாலு, டி.எஸ்.பி., கார்த்திகேயன், கலால் டி.எஸ்.பி., முருகன் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு தொடங்கிய ஊர்வலம் பழநி, தாராபுரம் ரோடு வழியாக அரசு மருத்துவமனை வரை சென்றது.

Advertisement