சிறுமி போட்டோ வைத்து மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது

அரியாங்குப்பம் : சிறுமி போட்டோவை சமூக வலைதளங்களில் விடுவதாக மிரட்டிய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஆகாஷ், 21. இவர், அரியாங்குப்பம் தனியார் காப்பகத்தில் தங்கி படித்து வந்தார்.

இவர், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், 17 வயது சிறுமியிடம் பழகி காதலிப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து, அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், அச்சிறுமி ஆகாஷிடம் பேசாமல் விலகி சென்றார்.

இந்நிலையில், காதலிக்கவில்லை எனில், செல்பி எடுத்து கொண்ட போட்டோவை சமூக வலை தளங்களில் பதிவிடுவதாக, சிறுமிக்கு தொடர்ந்து அவர் மிரட்டல் விடுத்து வந்தார். இது தொடர்பாக, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

பெற்றோர் மூலம், சிறுமி அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, நேற்று ஆகாைஷ கைது செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement